இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர வீடுகளை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக முதன் முறையாக தனித்தனி வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அனைத்து அடிப்படை வசதிகளுடன் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூரில் ரூ.17.17 கோடி மதிப்பில் கடந்த 8 மாதங்களில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு அதன் பணிகள் முழுமையாக முடிவடைந்தன. இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த முகாமில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அங்கன்வாடி மையம், நூலகம், குடிநீர் மேல்நிலை தொட்டி, குளியலறை, பூங்கா, சமுதாய கூடம், மைதானம், சாலைகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை தமிழர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 1 =