Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா

திருப்புவனத்தில் உள்ள வைகையாற்றில் பச்சை ஓலையில் குடில் அமைத்து பூஜையறை பெட்டி வைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம்,...
Homeஇந்தியாஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மாவட்ட  மீனவர்கள் விடுதலை- ஒருவருக்கு மட்டும் 14 மாதம் சிறை...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மாவட்ட  மீனவர்கள் விடுதலை- ஒருவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 22-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்களின் விசைப்படகுகள் அந்நாட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளது, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

x
error: Content is protected !!
%d bloggers like this: