இலங்கையின் பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்குமான எச்சரிக்கை – ஐ.நா

உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதனால் தற்காலிக தீர்வு கிடைத்தாலும், நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. இந்நிலையில் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று நோயின் தாக்கத்தால் ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள நாடுகள், இலங்கையைப் போன்ற அதே பொருளாதார நெருக்கடியைக் காணும் அபாயம் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஐ.நா வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், இலங்கையில் தற்போது நிலவும் மோசமான நிகழ்வுகளை நாம் காண்கிறோம். இது போன்ற நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை நாடுகளே கண்டுபிடிக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு இலங்கையின் நெருக்கடி ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 828 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு 150 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 9 = 11