
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு காமராஜர் நகர் பகுதியில் 1929 இல் மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பலஆண்டுகளாக இருக்கும் இம்மயானத்தில் தற்போது மண்ணின் தன்மை கெட்டு விட்டதாகவும், அருகில் குளம் இருப்பதால் புதைப்பதற்கு குழிதோண்டினால் தண்ணீர் வந்துவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் இஸ்லாமியர்களின் இறந்தவர் உடலை புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மயானத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மண் கொட்ட வேண்டும். மயானத்திற்குள் தண்ணீர் வராமல் இருக்க மயானத்தில் மண் கொட்டி உயரப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கையை இஸ்லாமிய மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஆசிக் கூறியதாவது மண்ணின் தன்மை கெட்டுவிட்டது, இதனால் உடல்கள் மக்கிப்போவதில்லை மேலும், புதைப்பதற்காக குழி தோண்டினால் தண்ணீர் வந்துவிடுகிறது.
எனவே, புதிய மண் கொட்டி மயானத்தை உயர்த்த வேண்டும், சுற்றுச் சுவர் அமைக்க வேண்டு மென்று, நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமாரிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்திருநதோம், இதன்பயனாக சிறுபான்மை துறை அமைச்சர், செஞ்சிமஸ்தான் எங்கள் இஸ்லாமிய அடக்கஸ் தலத்தை நேரில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளார்.
தமிழக அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று,அவர் கூறினார்.