புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி(35) திருமணம் ஆகாதவர். இவர் இன்று அதே பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது பாம்பு இவரை கடித்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து நாட்டு மருந்து எடுத்துக் கொண்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பெற்று வந்த சுமதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடலை அரசு அமரர் ஊர்தி வாகனம் மூலம் அவரது சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அமரர் ஊர்தி திடீரென பழுதடைந்து நின்று விட்டதால் அதனை ஓட்டுநர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இதனைத்தொடர்ந்து இறந்த சுமதியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை சிறிது தூரம் தள்ளி விட்டும் வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் வேறு ஒட்டுனருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து நபர் வாகனத்தை சரி செய்து மீண்டும் இயக்க செய்தார்.

சடலத்தை பேருந்து நிலையம் அருகே வைத்துக்கொண்டு தடுமாறியதை தொடர்ந்து அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் வந்த நிலையில் அரசு வாகனம் சரி செய்யப்பட்டதால் அதே வாகனத்தில் உடலை கொண்டு சென்றனர். இச்சம்பவத்தை பார்த்த சிலர் அரசின் ஆம்புலன்ஸ் குறித்து கேலியாக விமர்சனம் செய்தனர்.