
ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி நிர்மலா மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பயனித்த மனைவி நிர்மலா மீது லாரி ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், கணவன் கோவிந்தராஜ் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.