புதுகை மாவட்டம் இருதயபுரம் கிறிஸ்துராஜா தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா அருட்பணி சூசை தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருமயம் பாரத வங்கியின் மேலாளர் ராஜலட்சுமி மற்றும் பாரத வங்கியின் அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் எஸ்.கே.டி காந்தி உயர்நிலைப்பள்ளி பழனியப்பன், ராயவரம் கணேசன், தலைவர் பாரத மிகு மின் நிறுவன ஊழியர்களின் சமூக சேவை பங்கேற்றனர்.சேசு மேரி வரவேற்புரையாற்றினார். விழாவில் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டு சிறப்பாக சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இவ்விழாவில் கிறிஸ்துராஜா கல்வி குழுமம் சார்பாக சிறந்த ஆசிரியருக்கான விருதினை எஸ்.கே.டி காந்தி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பனுக்கு
பள்ளியின் தாளாளர் சூசை அடிகளார் வழங்கினார்.