இருசக்கர வாகனம் மோதி சிகிச்சையில் இருந்த பெண் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கோபால் (55), இவர் மனைவி ஜெகதாம்பாள் (51) குளித்துவிட்டு ஆவுடையார்கோவில் மணமேல்குடி சாலையில் வீடு நோக்கி வரும்பொழுது பின்னால் வந்த இருசக்கரம் வாகனம் வேகமாக மோதியதால் ஜெகதாம்பாள்பின்புறமாக கீழே விழுந்து தலையின் பின் பகுதி சிறுமூளை பகுதி பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு மூக்கிலும் காதிலும் இரத்தம் வரவே. அவரை அருகில் இருந்தவர்கள் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் ஜீலை 4ம் தேதி சேர்த்துள்ளனர் அங்கு அவரைபரிசோதனை செய்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கேயும் நிலைமை சரியில்லாத காரணத்தினால் புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறந்தாங்கிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஆவுடையார்கோவில் காவல்துறையினர் ஜெகதாம்பாள்  மரணம் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 + = 77