இராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 4400 மரக்கன்றுகள் நடும் திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க-வின் சுற்று சூழல் அமைப்பு சார்பாக தி.மு.க கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  44வது பிறந்த நாள் விழா இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில்  நடந்தது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலினின்  44-வது வயதை குறிப்பிடும் வகையில் 44 கிலோ கேக் தயாரிக்கப்பட்டது. பின்னர் அதைபோல் 4400 மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஜா,எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு கேக் வெட்டி, மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த விழாவினை மாவட்ட  தி.மு.க-வின் சுற்றுசூழல் அமைப்பாளர் முகம்மது சலாவுதீன் ஏற்பாடு செய்திருந்தார்.  மேலும் அக்கட்சியினர் இவ்விழாவில் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 1