தென் மண்டல அளவிலான மாவட்ட சிலம்பப் போட்டி இராஜபாளையத்தில் உள்ள ந.அ.இராமச்சந்திர ராஜா குருகுலம் பள்ளியில் நடைபெற்றது.
போட்டியானது சுப்பிரமணியபுரம் அமிழ்தினி சிலம்ப பயிற்சி பள்ளி சார்பாக நடைபெற்றது. அமெரிக்காவில் பிரைட் ஆஃப் இந்தியா எனும் விருது பெற்ற மக்கள் சேவகரும், சமூக நல ஆர்வலருமான தென்காசி ஆனந்தன் நிகழ்ச்சியை தலைமை ஏற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார், மேலும் இப்போட்டியில் 15 தனியார் மற்றும் 5 அரசு பள்ளிகளை சேர்ந்த 450 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சுப்பிரமணியபுரம் எஸ்.எம்.எம்.மிடில் ஸ்கூல் முதல் பரிசு, இரண்டாம் பரிசு ஸ்ரீராம் நர்சரி பிரைமரி ஸ்கூல், மூன்றாம் பரிசு அபிநயா வித்யாலயா மற்றும் ஆக்ஸ்போர்டு நர்சரி & பிரைமரி ஸ்கூல் மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களிடத்தில் உரையாற்றிய ஆனந்தன் அழிந்து வரும் தமிழரின் பாரம்பரிய கலைகளின் சிறப்புகளை தன்னால் முடிந்த வரை கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரையில் கொண்டு சேர்ப்போம் என மாணவர்களிடத்தில் உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.இராமசந்திரராஜா குருகுலம் பள்ளி சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் விருதுநகர் மாவட்ட சிலம்ப அசோசியேஷன் ரோட்டரி கிளப் சிட்டியை சேர்ந்த சிவகுமார் கலந்து கொண்டனர். ஆக்ஸ்போர்டு பள்ளி தலைமை ஆசிரியர் கந்தையா, என்.எ.ஆர்.ஆர். குருகுலம் பள்ளி தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி, இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி சிந்தாமணி, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி சுப்புலாபுரம், சங்கரன்கோவில் எ.வி.கே.மெட்ரிக் இண்டர் நேஷனல் பள்ளி, சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.