இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டு மண்வளத்தை பாதுகாத்திடுவீர்:கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ வேண்டுகோள்

அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா – மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் உழவர் திரள் பரவலாக்கம் வயல் விழா மேலூர் கிராமத்தில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையிலும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் பழனியப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய கேட்டுக்கொண்டார். மேலும் தற்போது உள்ள நவீன வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு பெருமளவிலான  இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டு மண்வளத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியர்களையும் நாம் கருத்தில் கொண்டு சாகுபடி மேற்கொண்டு பயனடைய விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.உதவி தொழில்நுட்ப மேலாளர் எஸ் நவாப் ராஜா உழவன் செயலியை பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கி கூறினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழில்நுட்பக் கையேடு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முன்னதாக உதவி வேளாண்மை அலுவலர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் க.தேவி  நன்றி கூறினார். கண்காட்சி ஏற்பாடுகளை இராமநாதன் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 5