இயக்குநர் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது.

 இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.

 இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது. அதனைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும். இந்த மாதம் இறுதிவரை படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.