செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார்
இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2007 ம் ஆண்டில் ஜப்பான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை துவங்கியது. இந்த மாநாட்டின் கூட்டம் வரும் 24-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிவரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.
பிரதமர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி 25-ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா.,,சபையில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.முன்னதாக ஜோபைடன் கடந்த மார்ச் மாதத்தில் வீடியோ கானபரன்சிங் மூலம் குவாட் மாநாட்டை நடத்தினார். அதில் இந்தோ பசிபிக் பிரசந்தியம் குறித்து பேசபட்டது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்ட ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார்
