இபிஎஸ் தலைமையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம்

சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், நாளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.