இந்தோனேசிய பயங்கர நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு; 300 பேர் காயம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்துள்ளார்.

பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமானோர் இருளில் தவித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 − 48 =