இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன் திமுக எம்.பி ஆ.ராசா சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜகவினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஆ.ராசா பேசிய காணொளியை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் ஆ.ராசா, “இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை என்றார். உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது. கிறிஸ்துவராக இல்லையென்றால் , இஸ்லாமியராக இல்லையென்றால் நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. ‘இப்படிபட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா. எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசியவர், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்” என்று ராசா பேசியிருக்கிறார்.

இந்த காணொளியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 + = 79