இந்திரா காந்தி பிறந்தநாளில் ஆக்ஸிஜன் கருவி ஆரணி அரசு மருத்துவமனைக்கு காங்., வழங்கல்

ஆரணியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 105.வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து அரசு மருத்துவமனைக்கு  ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் கருவி வழங்கப்பட்டது. மேலும், 300 பேருக்கு நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கு அசோக்குமார் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜபாபு, வாசுதேவன், பஞ்சாயத்து ராஜ்ஜியம் மாவட்ட து.தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் பொன்னையன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை பங்கேற்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டில்லி மோகனரங்கன், சைதை சம்பந்தம், தாவூத் ஷெரிப், பாபு, பிள்ளையார், கண்ணன், குருமூர்த்தி, தாமோதரன், வட்டார தலைவர்கள் மணி, சுகன்யா உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 இதேபோல் இரும்பேடு இந்திரா காந்தி சிலைக்கும், ஆரணி காந்தி ரோட்டிலுள்ள காந்தி சிலையில் இந்திரா காந்தியின் உருவ படத்திற்கு  வட்டார தலைவர் சரவணன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி மற்றும் முன்னாள் நகர தலைவர் டி.ஜெயவேல் ஆகியோர் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். இதில் மாவட்ட பொருளாளர் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், நேத்தபாக்கம் முருகன், தெள்ளூர் சேகர், பந்தாமணி, இளங்கோவன், சிவபாண்டியன், வி.செளந்தர், யு.ஜாபர்கான், மணிவேல், முருகன், முருகேசன், சீனு, பாபு, சுப்ராயன்பேட்டை மோகன், சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 3 =