இந்திய மருத்துவ கழகம், புதுக்கோட்டை கிளை வளாகத்தில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு இந்திய மருத்துவ கழகம், புதுக்கோட்டை கிளையின் துணைத் தலைவர் மருத்துவர் சாரதாமணி கொடியேற்றி சிறப்பு செய்தார், இதில் மருத்துவர்கள் சலீம், நவரத்தினசாமி, ராஜா, தர்மபாலன் மற்றும் சரவணன ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர், இறுதியாக நாட்டுப் பண் பாடி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.