இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி – அதானி குழும பங்குகள் ஒரே நாளில் பங்கு ஒன்றுக்கு 150 ரூபாய் சரிவு

இந்திய பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சரியத்தொடங்கியது.

நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதேவேளை, ஹிண்டன்பெர்க் ஆய்வு அறிக்கை வெளியானநாளில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று வர்த்தம் தொடங்கியது முதலே சரியத்தொடங்கியது.

குறிப்பாக, அதானி நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 927 புள்ளிகளும், நிப்டி 272 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தது. இதனால் வர்த்தகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலும் குறிப்பாக அதானி குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1,540 ரூபாய்க்கு தொடங்கிய அதானி நிறுவன பங்கு விலை வர்த்தக முடிவில் 1400 ரூபாயாக சரிந்துள்ளது. அதானி நிறுவன பங்குகள் ஒரே நாளில் பங்கு ஒன்றுக்கு 150 ரூபாய் சரிந்ததால் வர்த்தகர்களும், முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 5 =