இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவரங்குளம் பகுதி கிளை நிர்வாகிகள் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவரங்குளம் பகுதி கிளை நிர்வாகிகள் கூட்டம் எம்.விஜயன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர் ஆர்.சொர்ணகுமார், துணைச் செயலாளர் வி.ஆர்.லெலின்ராஜ் பங்கேற்று இன்றைய அரசியல் எதிர்கால கடமைகள் குறித்து பேசினர்.

இதனைத்தொடர்ந்து திருவரங்குளம் ஒன்றியம் தேத்தான்பட்டியில் தொடர்ந்து குடிநீர் பிரச்சனைக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து எதிர்வரும் 17ம் தேதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வேப்பங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாஸ்மார்க் கடையை  உடனடியாக அகற்ற வேண்டும், புதுக்கோட்டை முதல் திருக்கட்டளை, வேப்பங்குடி வழியாக ஆலங்குடி சென்று வந்த பேருந்து தொடர்ந்து வழித்தடத்தில் இயங்கவில்லை. உடனடியாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கருப்பையா, சண்முகம், வடிவேல், சரண்யா, ஆறுமுகம், மாரிமுத்து, மாரிக்கண்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.