இந்தியாவை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளமிட்டவர் நேரு: பேரா.விஸ்வநாதன்

ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி, ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை வாசகர் பேரவை இணைந்து இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள் விழாவை ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் கொண்டாடினர்.

விழாவிற்கு கல்லூரியின் தலைவர் குரு தனசேகரன் தலைமை வகித்தார்.விழாவில் சிறப்புரையாற்றிய வாசகர் பேரவை செயலர் பேரா.சா.விஸ்வநாதன் தனது உரையில்,
ஜவஹர்லால் நேரு சுதந்திரப் போராட்ட வீரர், பிரதம மந்திரி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், ராஜதந்திரி என்று பன்முகம் கொண்டவர். ஆங்கிலேய இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 17 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட வடுக்களையெல்லாம் களைந்து இந்தியாவை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளமிட்டவர் நேரு. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும் இந்தியா ஜனநாயகப் பாதையில் பயணிப்பதற்கு நேருவின் ஜனநாயகப் பண்புகளே காரணம்.நேரு இட்ட அடித்தளத்தில்தான் இந்தியா இன்றும் பல துறைகளில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அணைக்கட்டுகளை உருவாக்கி, “இந்தியாவின் நவீன ஆலயங்கள் ” என்று பெயரிட்டு நமக்கு வழங்கியதால் தான் இன்றைக்கு உணவு உற்பத்தியும் நாம் தன்னிறவடைந்திருக்கிறோம். அறிவியல் கல்வியை மேம்படுத்த ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களும், மேலாண்மைக்கு ஐஐஎம் போன்ற நிறுவனங்களும், மருத்துவ கல்விக்கு எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களும் நேருவின் காலத்திலேயே தொடங்கப்பட்டது. அணுசக்திக்கும் அவர்தான் அடித்தளமிட்டார். இந்தியாவின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய பொதுத்துறை நிறுவனங்கள் நேருவின் காலத்தில் தொடங்கப்பட்டது.வரலாற்றிற்கு அவர் அளித்துள்ள கொடைகள், ” உலக வரலாறு, ” “கண்டுணர்ந்த இந்தியா” மற்றும் அவரது “சுயசரிதை – “
கொரானா போன்ற பெருந்தொற்று காலத்திலும் அவர் இட்ட அடித்தளத்தில்தான் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளது.நேரு எல்லா காலத்திலும் நினைக்கப்பட வேண்டிய “நவின இந்தியாவின் சிற்பி.”. அவர் எல்லா கலைத்துக்கும் தேவையானவர்என்றார்.

விழாவில் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வாசகர் பேரவை சார்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி,. மகளிர் கல்லூரி முதல்வர் செ.கவிதா, கல்வியியல் கல்லூரி முதல்வர் தி. சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக தமிழ்த் துறைத் தலைவர் நா.பூர்ணிமா அனைவரையும் வரவேற்றார். வரலாற்றுத் துறைத் தலைவர் எம்.முத்துலட்சுமி நன்றி கூறினார். தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் இரா.பிரியா விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =