
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.41 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், பாதிப்பு 3.30 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 31,222 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக உயர்ந்தது. புதிதாக 290 பேர் இறந்துள்ளனர்,இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 441042 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 42942 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32224937 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 392864 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.