இந்தியாவில் மூன்றாவது அலை எச்சரிக்கை: ஐசிஎம்ஆர் அறிவிப்பால் ஆக்சிசன் தயாரிக்கும் பணி மும்முரம்

கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாரிக்க இந்தியா அரசு முடிவெடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதிலிருந்தே ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்தினால்தான் இலக்கை எட்ட முடியும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். லிண்டே இந்தியா நிறுவனம் இந்திய ஆக்ஸிஜன் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆக்ஸிஜனை தயாரிக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் இட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடன் இதற்காக லிண்டே நிறுவனம் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனையில் தயாராக இருக்கும்பட்சத்தில் வயோதிகர்கள் பலரது உயிரைக் காக்கமுடியும். மேலும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதாலும் இரண்டாவது அலையில் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் பல பேர் இறக்க நேரிட்டதால் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − = 23