இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் உடல்நலம், மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.80,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடுமையான நோய்களை தீர்க்க நாட்டில் நவீன சுகாதார கட்டமைப்பு அவசியமானது சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் சுகாதாரம் பற்றிய அணுகுமுறை தொலைநோக்கு பார்வை இல்லாதிருந்தது என்று பிரதமர் கூறியுள்ளார்.
கடுமையான நோய்களுக்கு, நாட்டில் தரம் மற்றும் நவீன சுகாதார உள்கட்டமைப்பு முக்கியமானது. மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் பரிசோதனை வசதிகள் மற்றும் முதலுதவிக்கான சிறந்த வசதிகள் இருக்க வேண்டும் என்ற அம்சத்திலும் அரசாங்கத்தின் கவனம் உள்ளது. இதற்காக, நாட்டில் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தயாராகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இந்திய மருந்து துறை பெற்ற விதம் முன்னெப்போதும் இல்லாதது. இதனை நாம் முதலீடாக்க வேண்டும் என்று பேசியுள்ளார். மேலும் இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது அரசின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் கூறியுள்ளார்
உலகம் இப்போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை சுகாதாரப் பாதுகாப்புக்கு மட்டும் அல்ல, ஆனால் நாங்கள் ஆரோக்கியத்திலும் பணியாற்றி வருகிறோம். அதனால்தான், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்று அனைவருக்கும் முழுமையான சுகாதாரம் என்ற பார்வையை உலகிற்கு முன் வைத்துள்ளோம் என்று பட்ஜெட்டுக்கு பிந்தைய வலைபரப்பில் ‘உடல்நலம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி’யில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.