இந்தியாவில் புதிதாக15,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இன்று புதிதாக 15,754 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,14618 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,253 ஆக உயர்ந்தது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,85,535 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.23% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,01,830பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =