இந்தியாவில் புதிதாக 7,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,49,726 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,965 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 9,651 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,65,016 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 56,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,13,01,07,236 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,83,815 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3