இந்தியாவில் புதிதாக 5,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இன்று புதிதாக 5,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,443 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,342 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,291 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,429 பேர் ஆக உள்ளது. என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =