இந்தியாவில் புதிதாக 5,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை

இந்தியாவில்இன்று 24 மணி நேரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 5,076 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,95,359 ஆக குறைந்தது.

இன்று புதிதாக 11 பேர் இறந்துள்ளனர்.இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,150 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,19,264 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 47,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.18% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 2,14,95,36,744 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,81,723 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − 69 =