இந்தியாவில் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா பாதிப்பு: 35,840 பேர் குணம்; 460 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா ஒருநாள் பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 31,265 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

தற்போது கொரோனா பாதிப்புடன் 3,68,558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,840 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 97.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.