
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.41 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.31 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 43,263 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981ஆக உயர்ந்தது. புதிதாக 338 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,41,749 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,567 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,23,04,618 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,93,614பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 71,65,97,428 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 86,51,701 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.