இந்தியாவில் நாள்தோறும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் – பிரதமர் மோடி

இந்தியாவில் நாள்தோறும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இமாசல பிரதேச சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பயனாளர்களிடம் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வழியே பேசினார். அப்போது அவர் கூறுகையில், இமாசல பிரதேசம் சாம்பியன் ஆக உருவெடுத்து உள்ளது. இமாசல பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதேபோன்று, மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கு நபர்களுக்கு 2வது டோஸ் போடப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதிகளை பெறவே இமாசல பிரதேசம் அதிகம் போராடியது.  ஆனால், இன்று சிறந்த முறையில் செயலாற்றுகிறது. ஒரு மலை சார்ந்த மாநிலம் என்ற வகையில் போக்குவரத்து, சேமிப்பு என பல தடைகளை சந்தித்தது. ஆனால், கொரோனா தடுப்பூசி திட்டத்தில் மாநில அரசு திறம்பட கையாண்டு உள்ளது. இதற்காக அரசுக்கும், அரசு குழுவினருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவில் நாள்தோறும் 1.25 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 5