இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய வகை கொரோனாவான ‘எக்ஸ்பி.பி.1.16’ தாக்கம் அதிகரிப்பதால், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6,050 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 3,320 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 28,303 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக கேரளாவில் 1,936, மகாராஷ்டிராவில் 803, டெல்லியில் 606, இமாச்சலபிரதேசத்தில் 367, குஜராத்தில் 327, கர்நாடகாவில் 323, அரியானாவில் 318, தமிழ்நாட்டில் 273, உத்தரபிரதேசத்தில் 192, ராஜஸ்தானில் 100, சத்தீஸ்கரில் 102, பஞ்சாப்பில் 111, கோவாவில் 162 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.