இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.42 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.31 கோடியை தாண்டியது. இன்று இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 33,376 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,08,330ஆக உயர்ந்தது.

இன்று புதிதாக 308 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 442317 ஆக உயர்ந்தது, தொற்றில் இருந்து ஒரே நாளில் 32198 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32374497 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 391516 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 73,05,89,688 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.