இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 32,937பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,937பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.  

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.3 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.22 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 32,937பேர் பாதித்துள்ளனர்  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,25,513 ஆக உயர்ந்தது. புதிதாக 417 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,31,642 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,909 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,14,11,924 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,81,947 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 97.48% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.96% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 54,58,57,108 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.