இந்தியாவில் எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு

கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல் நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் 2 ஆம் நாளான இன்று மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்தி ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளாது. மேலும் கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்வடைந்துள்ளது. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =