
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த வாரத்தில் இருந்து விமான சேவையை அதிகரித்து உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை 19ந்தேதியில் இருந்து ஊரடங்கு தளர்வுகளை பிரதமர் ஜான்சன் அறிவித்து உள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு இயக்கப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவையை அந்நாடு அதிகரித்து உள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் விமான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் 10ல் இருந்து 20 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நடைமுறை இந்த வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.
இதனால், இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இங்கிலாந்தின் லண்டன், ஹீத்ரோ ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும்.