இந்தியாவில் இன்று புதிதாக 6,442- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,442- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,748- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 46,389- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.04- சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 37,843- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 34- உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 250- ஆக உயர்ந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்புகளில் இது 1.19 சதவிகிதமாகும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒருநாளில் மட்ட்டும் 3,109,550- தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,159,816,124- ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + = 21