இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,352 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,29,03,289 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 366 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,39,895 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 34,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 3,99,778 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 + = 35