இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு தொற்று உறுதி

Ahmedábád, 2020. szeptember 8. Koronavírus-tesztre vesznek mintát egy lánytól az indiai Dharamszalában 2020. szeptember 7-én. Az 1,3 milliárd lakosú Indiában a koronavírus-járvány napi halálos áldozatainak száma 1133 emberrel rekordot döntött, a fertõzöttek száma 4,28 millióra nõtt, ezzel a dél-ázsiai ország megelõzte Brazíliát és második helyre került az Egyesült Államok után a globális összesítésben. MTI/AP/Adzsit Szolanki

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,625 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,17,69,132 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 562 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,25,757 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 36,668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,33,022 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,10,353 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.