இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் : டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவிற்க்கு தங்க பதக்கத்தை பெற்று  இதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்து நடப்பு ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற 6 சுற்றுகளில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் ஈட்டி எரிந்து தங்கபதக்கத்தை கைப்பற்றினார்.

நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்காக ஆண்கள் ஈட்டி எறிதல் ஏ பிரிவு தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்தார், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பைனலுக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சிவபால் சிங் தகுதிச் சுற்றுடன் வெளியேறினார்.ஏ பிரிவில் நீரஜ் உள்பட மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.அதில் நீரஜ்  முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து நேரடியாக பைனலுக்கு முன்னேறினார்.

 இன்று நடந்த இறுதி சுற்றிலும் முதல் வாய்ப்பிலேயே 87.03 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். பின்னர் 2-வது சுற்றில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது.