இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும்: ஸ்கைரூட் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’, இம்மாதம் 12ம் தேதியில் இருந்து 19ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

விண்வெளித் துறையில் தனியார் துறை பங்கேற்பை எளிதாக்க 2020ல் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்திய விண்வெளித் திட்ட நிறுவனர் ‘விக்ரம் சாராபாய்’க்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘விக்ரம்-எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வானிலையைப் பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, ராக்கெட் ஏவுதலை இம்மாதம் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம். இம்மாதம் 15ம் தேதியில் இருந்து 19ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுவதற்கான கால அவகாசம் உள்ளது. இந்நிலையில், நாளை (நவ.18ம் தேதி) காலை 11.30 மணியளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 5