
இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந் தேதி (அக்டோபர்) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும், தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக வீரர்கள் அறிவிப்பு டுவிட்டர் மூலம் அறிவிக்கப்படும். அல்லது பத்திரிகையாளர் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போர்டால் அறிவிக்கப்படும். ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு, தங்களது அணி வீரர்கள் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. அவர்கள் சிறந்த ரசிகர்களால் அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள வீரர்கள் அவர்களும் குழந்தைகளின் மழலை குரல்களிலும், மனைவி மட்டும் இருப்பவர்கள் மனைவி மூலமாகவும், காதலி இருப்பவர்கள் அவர்கள் மூலமாகவும், மனைவி மற்றும் காதலி இல்லாத வீரர்கள் அவர்களின் பெற்றோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.