இங்கிலாந்து விஞ்ஞானிகள் முதல் முதலாக விண்ணில் ஏவிய ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

லண்டன், இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது.

அதன்பின் போயிங் விமானத்தில் 9 செயற்கை கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் ரெுங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தவில்லை.

இதனால் இங்கிலாந்தின் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிந்தது. இது தொடர்பாக விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் கூறும்போது, “செயற்கை கோள்கள் சுற்றுப் பாதையை அடைவது பற்றிய எங்களின் முந்தைய டுவிட்டை அகற்றுகிறோம். எங்களால் முடிந்தால் கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்தது. இங்கிலாந்து மண்ணில் முதல் முதலாக விண்ணில் ஏவிய ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இப்பணி வெற்றிகரமாக முடிந்திருந்தால் பூமியின் சுற்றுப்பாதையில் ராக்கெட் அனுப்பும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருந்திருக்கும். இங்கிலாந்து தயாரித்த செயற்கைகோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


https://www.dailythanthi.com/News/World/uks-first-ever-rocket-launch-mission-into-orbit-ends-in-failure-875983
https://www.dailythanthi.com/News/World/uks-first-ever-rocket-launch-mission-into-orbit-ends-in-failure-875983

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 + = 74