இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,612- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 103 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஒருநாள் பாதிப்பு 31 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி இருந்த நிலையில், சனிக்கிழமை தொற்று பாதிப்பு சற்று சரிந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 22,383- பேர் குணம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,89,703-ஆக உள்ளது.