ஆவுடையார் கோவில் பகுதியில் வீடு கட்ட இருபாடு கொண்ட மண் அடிப்பு தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தாழ்வான பகுதிகளில் வீடு கட்டி குடியிருந்தோர் அவ்வப்போது பெய்த கனமழையால் தனது வீட்டை சுற்றி நீர் பிடிப்பு இருந்ததால் வீடுகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் குழந்தைகள் மழை காலங்களில் வீட்டை சுற்றி தேங்கி நின்ற நீரினால் பல்வேறு தொற்று வியாதிகளுக்கு ஆட்பட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளமான பகுதிகளில் வீடு கட்டி வசிப்போர் தனது வீட்டை சுற்றி இருபாடு கொண்ட மண்களை அடித்து உயரமாக்கி கொள்ளலாம். என்றும் அதற்காக தாலுகா அலுவலகத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பதிவு செய்து அனுமதி பெற்ற பின்னரே இருபாட்டு மண் அடித்துக் கொள்ளலாம் என்றும் ஆணை பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் ஆவுடையார் கோவில், புன்னிய வயல் மற்றும் ஒக்கூர் போன்ற பகுதிகளில் இப்பொழுது தனது வீடுகளை சுற்றி இருபாடு மண்ணை அடித்து மேடாக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − 24 =