புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டம், ஆவுடையார் கோவில் கால்நடை மருத்துவமனையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வீட்டில் வளர்க்கும் பிராணியான வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. முகாமை ஆவுடையார் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் செல்ல வளர்ப்பு பிராணிகளுக்கு டாக்டர் முத்து துரை மற்றும் டாக்டர் செல்வம் ஆகியோருடன் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கர் மற்றும் சேகர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர்கள் செல்ல பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தினார்கள். மேலும் மருத்துவர்கள் நாய் வளர்ப்பவர்களிடம் நாய் வளர்ப்பு முறைகளையும் தடுப்பூசியின் நன்மைகளையும் எடுத்துக் கூறினார்கள்.முன்னதாக நிகழ்ச்சி துவங்கிய பின் வெறி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் தற்காப்பு கலை பயிலும் மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுநர் சரவணன் முன்னிலையில் தற்காப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.