ஆவுடையார்கோவில் அருகே எழுநூற்றி மங்கலம் கிராமத்தில் குளியல் அறையுடன் கூடிய 205 கழிவறைகள் கிராமாலயா தொண்டு நிறுவனம்

திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட கிராமாலயா தொண்டு நிறுவனம் சாய் தாமோதரனால் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது.  கிராமப்புற ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவில்  6 மாநிலங்களில் சுகாதாரப் பணிகளை செய்து வருகிறது.கிராமாலயா தொண்டு நிறுவனம் நடுவண் அரசின் குடிநீர் சுகாதார நலத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமாகும். தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு என 6 மாநிலங்களில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்த பெருமைக்குரியதாகும்.

திருச்சி நகர்  பகுதியில் கல்மந்தை என்கிற குடிசைப் பகுதியை இந்தியாவிலேயே முதல்முறையாக 100 விழுக்காடு கழிப்பறை வசதி உள்ள இடமாக ஆக்கிய பெருமை இதற்கு உண்டு, குடிநீர் சுகாதாரம், கழிப்பறை சுகாதாரம், தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து என்கிற ஐந்து நிலைகளில் சுகாதார பணிகளைமேற்கொண்டு வருகிறது.

தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள கிராமாலயா தொண்டு நிறுவனம், கொரானா போன்ற கொடிய பெருந்தொற்று காலத்திலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுகாதார பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. நடப்பாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 6 முன்மாதிரி கிராமங்களில் 825 தனிநபர் கழிப்பறைகளை கட்டி சுகாதார விழிப்புணர்வையும் வழங்கி வருகிறது.அங்கன்வாடி பணியாளர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து நிலைகளிலும்  தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்த  பயிற்சிகளை வழங்கி வருகிறது.தற்போது ஆவுடையார்கோயில் ஒன்றியம் புண்ணியவயல் ஊராட்சி எழுநூற்றிமங்களத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்கி சுமார் 205 தனிநபர் கழிப்பறைகள் (குளியலறைகள் கூடிய கழிப்பறைகள்) கட்டி தந்துள்ளது.உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு மற்றும்  மரக்கன்றுகள் வழங்கும் விழா எழுநூற்றிமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவர்  சுரேஷ் தலைமையேற்று  பயனாளிகளுக்கு எலுமிச்சை மற்றும் கொய்யா மரக்கன்றுகளை வழங்கினார். 

கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் மற்றும் தொழில்நுட்ப அலுவலர் எழில் இளங்கோ  கழிப்பறை அவசியத்தையும்  திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்..ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, ஜெயந்தி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். சுகாதாரம் குறித்து பள்ளி மாணவர்களின் பாடல்,  நடனம் நாடகம் கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றது. முன்னதாக கிளாடிஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் கிராமாலயாவின்  வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 42 = 46