அறந்தாங்கி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரம் கூட்டுறவு நூற்பாலையில் அண்ணா தொழிற்சங்க தலைவர் தாயுமாதவன் தொ.மு.ச தொழிற்சங்கத்தினர் இணைந்து நூற்பாலை முன்பு ஆவுடையார் கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் கோரிக்கையாக எட்டு மணி நேர பணியில் தற்போது 80 கிலோ நூல் எடுப்பதை 110 கிலோ எடுக்க கட்டாயப்படுத்துவதாகவும் ஒப்பந்த பணிகளை சாய்ராம் என்ற தனியார் ஒப்பந்ததாரரிடம் வழங்கியதை கண்டித்தும் சாலை மறியல் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கூட்டுறவு நூற்பாலை முன் அமர்ந்து தொழிலாளர்கள் தற்பொழுது கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

கூட்டுறவு நூற்பாலையில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 60 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய பதில் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்து தொழிற்சங்கங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 2