ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குஇன்று காலை 11 மணியளவில் கற்றல் கற்பித்தல் பணியை மேம்படுத்துவதற்காக ஐம்பதாயிரம் மதிப்பிலான (₹50000) இரு SMART TV யினை பள்ளியின் முன்னாள் மாணவரும் சாமி V.லேண்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான முனைவர் சாமி P. வெங்கட் அவர்கள் வழங்கி தந்து சிறப்பித்தார். இதனை தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், ஆசிரியர் குமார்,இராஜேந்திரன், திருவருட் செல்வன், பாக்கியராஜ் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.

இதனை உடனடியாக இரண்டு வகுப்பறையில் பொருத்தப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.மேலும் கடந்த 19-01-2023 முதல் 21-01-2023 வரை அறந்தாங்கியில் மாவட்ட அளவிலான JRC முகாம் சிறப்புடன் நடைபெற்றது. இம்முகாமில் பள்ளியில் சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்த பத்து மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர் செல்வஷாஜி அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் சாமி P.வெங்கட் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நன்றி.