ஒன்பதாம் மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் பிரகதீஸ் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று அரசு வழங்கும் ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவன் பிரகதீஸ்கும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கவிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மாணவனுக்கு பட்டதாரி ஆங்கில ஆசிரியர் ரூபன்விஜய் மற்றும் பட்டதாரி கணித ஆசிரியை குருப்ஸ்கயா ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.